பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கிய “முகமூடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், தொடர்ந்து அவர் பெரிய வாய்ப்புகள் பெறவில்லை. இதனால், ஹிந்தி சினிமாவுக்கு சென்றார், ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.இதனால், அவர் தெலுங்கு சினிமாவில் மீண்டும் நுழைந்தார். பின்னர், “டிஜே துவாடா,” “ஜெகநாதம்,” “அரவிந்த சமேதா,” மற்றும் “அல வைகுண்டபுரமுல்லோ” ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை தேடி வந்தன.
அதன்பிறகு, அவர் தமிழில் விஜய்யுடன் “பீஸ்ட்” படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.தற்போது, அவர் விஜய்யுடன் “ஜனநாயகன்,” சூர்யாவுடன் “ரெட்ரோ,” மற்றும் லாரன்ஸுடன் “காஞ்சனா-4” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அல வைகுண்டபுரமுல்லோ” திரைப்படம் தனது தமிழ் படமாகும் என்றும், அது தனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் என்றும் தெரிவித்தார். ஆனால், இது ஒரு தெலுங்கு திரைப்படம் என்பதால், அவரது இந்த கூற்று தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
“நீங்கள் தமிழுக்கும் தெலுங்குக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூடத் தெரியாமல் எப்படி நடிக்கிறீர்கள்?” என சிலர் சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்தனர்.இதையடுத்து, பூஜா ஹெக்டே, தனது கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார். அவர் கூறியதாவது, “நான் தவறுதலாக அப்படி சொல்லிவிட்டேன், எனது உள்நோக்கம் அது அல்ல. எனக்குத் தெலுங்கு சினிமாவிற்கு என்றும் நன்றி உணர்வு இருக்கிறது. இதன்மூலம், அவர் தெலுங்கு ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.