Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பார்ட்டியில் லூட்டி அடித்த நடிகை ஓவியா… கமெண்ட்ஸ்களை குவித்த நெட்டிசன்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டபோது, ரசிகர்கள் அவருக்கென தனி ஆர்மி அமைத்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த பெண் போட்டியாளருக்கும் இப்படி ஆர்மி அமைத்து கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸுக்கு பிறகு, ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 உள்ளிட்ட சில பெரிய படங்களில் ஓவியா நடித்தாலும், அவை பெரிதாக செம்மையாகாமல், ஓவியா சினிமாவில் இருந்து பின்வாங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் ஓவியாவின் கவர்ச்சி வீடியோ என ஒரு வீடியோ லீக் ஆகி இந்திய அளவில் டிரெண்டாகியது. அந்த வீடியோ உண்மையா பொய்யா என ஒருவர் கேட்டபோது, அதனை ஓவியா ஒரு மர்மமாகவே விடுங்கள் என்று பதிலளித்தார். இதற்கிடையில், பாங்காக்கில் ஒரு நைட் பார்ட்டியில் கிளாமர் உடையுடன் கொண்டாடிய வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இப்படி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News