மாடல் அழகியாக இருந்து சின்னத்திரை நடிகை ஆனவர் நிவேதா ரவி. ‘சிங்கப்பெண்ணே’ தொடர் மூலம் புகழ்பெற்றார். அவர் இயக்குனர் நிவாஸ் சண்முகத்தை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் காதலரை திரைப்பட இயக்குனராக்கி அழகு பார்க்க தானே தயாரிப்பாளராகி உள்ளார். காதலர் நிவாஸ் சண்முகம் இயக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ என்ற படத்தை தயாரித்து அவரே நாயகியாகவும் நடிக்கிறார். அவருடன் ரமா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார், எம்.எஸ்.லாம்ப் இசை அமைக்கிறார்.
