கொச்சியில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார் நிமிஷா சஜயன்.இந்த வீட்டிற்கு ஜனனி என பெயர் சூட்டியுள்ளார். இந்த நிகழ்வில் மலையாளத் திரையுலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகை அனு சித்தாரா, மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் இயக்குனர் சிதம்பரம், நடிகர் கணபதி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனு சித்தாரா உள்ளிட்ட அங்கே வருகை தந்த சில பெண்களுக்கு நிமிஷா சஜயன், பூச்சூடிவிடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
