Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

தன்னை குறித்த உருவ கேலி விமர்சனங்களுக்கு பளீச் பதிலடி கொடுத்த நடிகை நேஹா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது பிசியான சின்னத்திரை நடிகையாக வலம்வருபவர் நடிகை நேஹா. தற்போது அவர் மிகவும் பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தத் தொடரில் சமீபத்தில் வெளியான ஒரு நடனக் காட்சிக்குப் பிறகு, அவரது மீது சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் அதிகரித்தன. குறிப்பாக அவரது தோற்றத்தை மையமாக கொண்ட உருவ கேலிகள் அதிகம் வந்தது.

இருப்பினும், இவ்வாறான விமர்சனங்களை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல், தனது நடிப்பை தொடர்கிறார். ஆனால் சமூக வலைதளங்களில் உருவாகும் விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்த நிலையில், அதற்கெதிராக தனது பதிலைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சந்தானம் நடித்த ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை வசனத்தைப் பயன்படுத்தி, “அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி, இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க…” என்ற வசனத்துடன் ஒரு ரீல்ஸ் வீடியோ உருவாக்கியுள்ளார். இதன்மூலம், தனது தோற்றத்தை இழிவுபடுத்தும் விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் நேஹா. அவரது இந்த செயலை திரை உலகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் ஆதரித்து வரவேற்றுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News