மலையாளத் திரைப்படங்களில் நடித்துவந்த நடிகை நதியா, 1985ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ‘பூமழை பொழியுது, சின்னத்தம்பி பெரியத்தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், 2004ஆம் ஆண்டு ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘தாமிரபரணி, சண்ட, பட்டாளம்’ போன்ற படங்களிலும், அடுத்தடுத்த காலங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது நதியாவிற்கு 58 வயதாகியுள்ள நிலையில், இன்னும் தனது உடலை ஃபிட்னஸாக சிறப்பாக பராமரித்து வருகிறார். அதற்காக கடுமையான டயட் முறையையும், தினசரி உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.