தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், டப்ஸ்மாஷ் வீடியோக்களால் பிரபலமான மிர்னாளினி ரவி. அதற்கு முன்னரே அவர் ‘நகல்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

பின்னர் விஷால் நடித்த ‘எனிமி’ உள்ளிட்ட சில படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் அவர் நடித்த “மால டும் டும்” பாடல் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்திலும் நடித்தார்.
ஆனால் அதன்பின் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அவர், அண்மையில் வெளியிட்ட நவீன உடை அணிந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.