பாலிவுட் டோலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், நடிகை பிபாஷா பாசு தோற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மற்ற நடிகைகளை இப்படி சொல்வது தவறு என அவர்மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

நடிகை மிருணாள் தாக்கூரின் விமர்சனங்களுக்கு நடிகை பிபாஷா பாசு பதிலளித்திருந்தார். அதில் நல்ல ஆரோக்கியத்திற்காக உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மிருணாள் தாக்கூருக்கு மறைமுகமாக பதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த விவாததிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு விளக்கம் அளித்துள்ளார் மிருணாள் தாக்கூர். அதில், ‛எனது இளம் வயதில் நான் அளித்த பேட்டி வீடியோ அது. அந்த சமயத்தில் பல முதிர்ச்சியற்ற கருத்துக்களை நான் பேசியிருந்தேன். அதற்காக நான் வருந்துகிறேன். யாரையும் அவமானப்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஒரு பேட்டியில் நான் விளையாட்டாக பேசியது திரித்து பேசப்படுகிறது. நான் காலத்தால் வெவ்வேறு விதமான அழகை மதிக்க கற்றுக் கொண்டேன் என்று ஒரு விளக்கம் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.