தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆத்வி சேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் ‘டகோய்ட் : தி லவ் ஸ்டோரி’. இந்த படத்தை இயக்குநர் ஷனைல் தியோ இயக்கி வருகிறார். கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில், ஆத்வி சேஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பின்போது இருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆத்வி சேஷுக்கு காயம் ஏற்பட்டாலும், அவர் படப்பிடிப்பு இடைவேளையில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, பின்னர் மீண்டும் வந்தும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால் மிருணாள் தாக்கூர், தன்னுடைய காயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இத்துடன், இந்த படத்தில் ஆரம்பத்தில் மிருணாள் தாக்கூருக்கு பதிலாக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், கதாநாயகனின் பாத்திரத்தில் அதிக தாக்கம் இருப்பதாக உணர்ந்து, இந்த படத்திலிருந்தே விலகிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன