பஞ்சாபைச் சேர்ந்த மெஹ்ரின் பிரதிர்ஸ்தா, தெலுங்கு திரைப்படங்களில் முதலில் அறிமுகமானார். பின்னர், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பஞ்சாபி, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் கடைசியாக, தனுஷ் ஜோடியாக நடித்த பட்டாஸ் படத்தில் அவர் நடித்திருந்தார்.
இப்போது, ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இந்திரா என்ற படத்தில் வசந்த் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கும் இந்தப் படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். அஜ்மல் தஹஸீன் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், சுனில் வர்மா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.