‘கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு, வாள மீனுக்கும்’ என்ற பாடலால் புகழ் பெற்றார் நடிகை மாளவிகா. 2007ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபருடன் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். ‘திருட்டு பயலே’ திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. மேலும், திருமணத்திற்குப் பிறகு அவர் படங்களில் நடிக்கவும் இல்லையென்று கூறப்படுகிறது.

தற்போது சினிமாவிற்குத் திரும்ப ஆசைப்படும் மாளவிகா, ஒரு முன்னணி ஹீரோவின் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இளம் கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக நீச்சல் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்திய மாளவிகா, அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களை ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா? என விமர்சித்துள்ளனர். அந்த புகைப்படத் தொகுப்பு மூலம் அவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் பல திரைப்பட வாய்ப்புகள் வரலாம் என நம்புகிறாராம். மேலும், வில்லி கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் என்று கூறப்படுகிறது.