மடோனா செபாஸ்டியன் விஜய்யின் தங்கையாக லியோவில் கவனம் ஈர்த்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றிருந்தது. கடைசியாக ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். பென்ஸ் படத்தில் மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவின் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
