தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன் ‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘பாண்டிய நாடு’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘வேதாளம்’ ஆகிய தொடர் வெற்றிப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான லட்சுமி மேனன். அவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘றெக்க’ திரைப்படத்திற்குப் பிறகு, திடீரென தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.

அதன்பின், அவர் மீண்டும் திரும்பிய படம் ‘புலிக்குத்தி பாண்டி’. இந்த படம் நேரடியாக டெலிவிஷனில் வெளியானதால், அது அதிகமான கவனத்தை ஈர்க்கவில்லை. அதற்குப் பிறகு, அவர் நடித்த ‘எஜிபி’ மற்றும் 2003ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்கள் கூடவும் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.
2024 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘சப்தம்’ திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது ஒவ்வொரு திரும்பும் முயற்சிகளும் ரசிகர்களின் கவனத்திலேயே இல்லாமல் போய்விடுகின்றன.தற்போது, அவரது அடுத்த தமிழ் திரைப்படமாக ‘மலை’ வெளியாவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இதில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படம் மட்டுமாவது லட்சுமி மேனனுக்கு ஒரு நல்ல மறுபிரவேச வாய்ப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.