‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். சமீப காலமாக அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களில் தெலுங்கு படங்களில் அவரது நடிப்பில் ‘பர்தா’ மற்றும் ‘கிஷ்கிந்தாபுரி’ படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதே சமயம் தமிழில் கடைசியாக டிராகன் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் ‘பைசன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த தெலுங்கு நடிகை கோமலி பிரசாத், அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பை பாராட்டி தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு அவர் கூறியதாவது, வித்தியாசமான கதாபாத்திரங்களை தங்களது திறமையால் தனித்தனியாக உருவாக்கும் நடிகர்களை நான் எப்போதும் பாராட்டி வருகிறேன். அனுபமா பரமேஸ்வரன் அப்படிப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். இந்திய திரையுலகம் அவருக்கான பல வலிமையான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும். பைசன் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் தனித்துவமானதும் பாராட்டுதலுக்குரியதும் ஆகும்” என்கிறார்.