Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சனோன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் எல். ராய் பாலிவுட்டில் ஏற்கனவே ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ரங்கி ரே’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் மிகுந்த பிஸியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே வாரணாசி மற்றும் டெல்லி பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கிர்த்தி சனோன் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு இதுவென்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த கதாபாத்திரம் மூலம் கிர்த்தி சனோன் இதுவரை இல்லாத விதமாக தனது நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News