பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் அட்ராங்கி ரே போன்ற படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் ஹிந்தியில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘தெரே இஸ்க் மெயின்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆனாலும், தனுஷ் மற்ற படங்களில் நடித்து வந்ததால், படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. இப்போது படப்பிடிப்பு துவங்கியதாகத் தெரிகிறது.
இதில் தனுஷின் ஜோடியாக கிர்த்தி சனோன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. இப்போது அதை அதிகாரப்பூர்வமாக ஒரு முன்னோட்ட வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில் தெருக்களில் வன்முறைகள் நடக்கும்போது, கையில் பெட்ரோல் கேன் கொண்டு வரும் கிர்த்தி, அதை தலையில் ஊற்றி வாயிலில் சிகரெட்டை வைத்து லைட்டரை ஆன் செய்வது போன்ற காட்சிகள் உள்ளன. இதில் கிர்த்தி சனோன் ‘முக்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.