பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சினிமா உலகில் ஒரு பிஸியான நடிகையாக இருந்தவர். ஒரு கட்டத்தில், தனது ‘மணிகர்ணிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறினார். சமீபத்தில் வெளியான ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்கேற்ப, இன்னொரு பக்கம் அரசியலிலும் களமிறங்கி, தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி பதவியை வென்றார். இந்நிலையில், தனது நீண்ட நாள் கனவாக இருந்த ஹோட்டல் தொடங்கும் திட்டத்தையும் தற்போது நிறைவேற்றியுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ‘தி மவுண்டைன் ஸ்டோரி’ என்ற பெயரில் இந்த ஹோட்டலைத் தொடங்கியுள்ளார் கங்கனா. இதுவரை பல ஊர்களுக்கும் பல நாடுகளுக்கும் சுற்றிப்பார்த்தபோது, தன்னை கவர்ந்த மற்றும் கண்டுபிடித்த விதவிதமான உணவுகளை இந்த ஹோட்டலில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஹோட்டலின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து, சமீபத்தில் அங்கு சென்று பார்வையிட்ட கங்கனா, பலருக்கும் அங்கே விருந்து பரிமாறும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் 14ம் தேதி, காதலர் தினத்தன்று, இந்த ஹோட்டலின்
திறப்பு விழா நடைபெற உள்ளது.