நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதுமே எனது நண்பனாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார், பலரும் இந்த புகைப்படத்திற்கும் ஜாக்கி ஷெராவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி வந்த நிலையில், தற்போது அது குறித்த சஸ்பென்சை உடைத்துள்ளார் கல்யாணி. இது குறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று நான் வெளியிட்ட புகைப்படத்தில் ஜாக்கி ஷெராப்புடன் இருக்கும் சிறுவன் தான் என்னுடைய நண்பன் பிரணவ் மோகன்லால். அந்த படத்தில் இருக்கும் அந்த மொட்டை வேறு யாரும் அல்ல,, அது நான் தான்” என்று கூறியுள்ளார்.
