தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் பிரபலமான காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் சிலவேளைகளில் மட்டுமே தோன்றியிருந்தார். தற்போது மீண்டும் முழுமையாக நடிப்பிற்கு திரும்ப தயாராகி வருகிறார். கடும் உடற்பயிற்சிகள் மூலம் தனது உடல் அமைப்பை முந்தையபோல் பளபளப்பாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போல் காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அவரின் உடல்நிலை குறித்து கவலைப்பட்டனர். ஆனால், உண்மையில் அவர் மேற்கொண்டது ‘டீ-ஏஜிங்’ (De-Aging) சிகிச்சை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உடல் தோற்றத்தையும் முகப்பொலிவையும் இளமையாக மாற்றும் மருத்துவ சிகிச்சையாகும். சினிமாவில் மீண்டும் தன்னுடைய இடத்தை உறுதிசெய்யவும், தனது பழைய தோற்றத்தை மீட்டெடுக்கவும் இந்த சிகிச்சையை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.