பல பாலிவுட் பிரபலங்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர். இதைப் போல் கோலிவுட்டிலும், பிக் பாஸ் பிரபலங்கள் யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால் ஆகியோர், கவர்ச்சியுடன் ஹோலி கொண்டாடிய வீடியோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஜோதிகா மற்றும் சூர்யா, மும்பைக்கு குடியேறியதிலிருந்து, அவர்கள் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. தமிழ் சினிமா ரசிகர்கள் இதை விவாதித்தாலும், அவர்கள் இதை பொருட்படுத்தாமல், தங்களின் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஜோதிகாவின் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியான “டப்பா கார்ட்டல்” நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் அவர், தெனிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை உருவாக்க இயக்குநர்கள் தயங்குகின்றனர் என தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை முன்னிட்டு, அவர் தனது அம்மா வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.