‘உப்பேனா’ படத்தின் இயக்குநர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் தனது 16வது திரைப்படமான ‘பெத்தி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார் மற்றும் ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து முக்கிய கதாபாத்திரங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன.
சமீபத்தில் இப்படத்தின் கதாநாயகியான ஜான்வி கபூர் நடித்துள்ள ‘அச்சியம்மாள்’ என்ற கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

