நடிகை ஜான்வி கபூர் தான் செய்துள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார், அதில் நான் நடிகையாகக் கூடாது என்பதில் என் அம்மா கண்டிப்பாக இருந்தார். ஆனால் என் ஆசையை ஒருகட்டத்தில் புரிந்துக்கொண்டார். அதேபோல் என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் என்னையும் என் தோற்ற அழகையும் குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தேன் என்று தெரிவித்தார். தன் காதலரைப் பற்றிப் பேசிய ஜான்வி கபூர், காதலர் சிகர் பஹாரியா நன்றாக குதிரை சவாரி செய்யக்கூடியவர் என்று கூறினார். ஜான்வி கபூர் தனது உதட்டை சரி செய்ய buffalo plasty என்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


