Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பும் நடிகை ஐரா அகர்வால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘காட்டுப்பய சார் இந்த காளி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜஸ்தான் மாடல் அழகி ஐரா அகர்வால். பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். கங்கா, கண்மணி, கடைகுட்டி சிங்கம், ராஜாமகள், செம்பருத்தி, மவுனம் பேசியதே உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது ‘அமரம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்குத் திரும்புகிறார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன், சி.ஆர். ராஜன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில், ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர் இசையமைக்க, பரத்குமார் மற்றும் கோபிநாத் ஒளிப்பதிவை செய்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன்.

இப்படம் குறித்து இயக்குநர் தெரிவித்ததாவது: “இந்தப் படம் மூன்று காலகட்டங்களில், மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமரக் காதல் கதை. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.” என்றார்

- Advertisement -

Read more

Local News