Touring Talkies
100% Cinema

Wednesday, August 13, 2025

Touring Talkies

மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்கும் நடிகை கௌரி கிஷன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிக்கும் கிரைம் திரில்லர் படம் ‛அதர்ஸ்’. இந்த படம் மருத்துவதுறை பின்னணியில் நடக்கிறது. கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக ஹீரோ ஆதித்யா மாதவனும், 96 பட புகழ் கவுரி கிஷன் டாக்டராகவும் வருகிறார்கள். இவர்களை தவிர அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெரடி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பார்வையை வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் வெளியிட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

மருத்துவத்துறை பின்னிணியில் அதில் நடக்கும் முறைகேடுகள், கிரைம் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும் அதர்ஸ், அதிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்திடன் போஸ்டரில் சிசு இடம் பெற்று இருப்பதால் கர்ப்பம், குழந்தை, பிரசவம் பின்னணியில் இந்த கதை உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News