சின்னத்திரை ரியாலிட்டி ஷோவின் மூலம் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன், தனுஷ் நடித்த ‘3’ படத்தில், சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தற்போது, சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் அவர், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்,

பொதுவாக எல்லோரும் உடற்பயிற்சி மையத்துக்கு உடல் எடையை குறைக்கவே செல்வார்கள். ஆனால் நான் உடல் எடையை அதிகரிக்கவே அங்கு சென்றேன். கொஞ்சம் குண்டாகவேண்டும் என்று எண்ணி, ஒரு நாளில் 10 இட்லிகள் வரை சாப்பிட்டேன்.
இதனால் மிகவும் குண்டாகி விட்டேன். அதன் பிறகு உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைக்கு ஆளானேன். நான் எந்த வகையான உடையையும் அணிந்தாலும் அதை வைத்து பிறர் கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தற்போது அனைவரின் பார்வையும் தவறாக மாறிவிட்டது. இதனால் மனவேதனையுடன் உடல் எடையை குறைக்க நேர்ந்தது என கேப்ரில்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.