நடிகை பிந்து மாதவி ‘வெப்பம்’, ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், ‘பிளாக்மெயில்’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதற்கிடையில் அவர் நடித்த தெலுங்கு படம் ‘தண்டோரா’ அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. படத்தில் நவ்தீப், நந்து, ரவி கிருஷ்ணா, மாணிகா சிக்கலா, மவுனிகா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பிந்து மாதவி, 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தயாராகி ஒரு வருடம் ஆன இத்திரைப்படம், இப்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் மூலம் நல்ல ரீ-என்ட்ரி கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

