அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாகவும், வில்லியாகவும் நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லி வேடங்களில் தொடர்ந்து பரபரப்பாக நடித்து வரும் இவர், தமிழில் சமுத்திரக்கனி நடித்த ‘விமானம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அனுசுயா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்து நடனமாடினார். அவரது நடனத்தை ரசிக்க வந்த இளம் ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடன் விசில் அடித்தனர். ஆனால், சிலர் “ஆன்ட்டி என கேலி செய்து அவரைப் பார்த்து கூச்சலிட்டனர்.
இந்தத் தவறான பேச்சுக்களை கேட்டதும், அனுசுயா நடனத்தை உடனே நிறுத்தி, மேடையின் முன் சென்று மைக்கை எடுத்து கொண்டு, “நீங்கள் என்னை சீண்டினால், நான் என்ன செய்ய முடியும் என்பதை உங்களுக்கு காட்டிவிடுவேன்! உங்களுக்கு தைரியம் இருந்தால், மேடைக்கு வந்து பார்க்கலாம்!” என தெலுங்கில் திடீரென பதிலளித்தார்.அவரது இந்த எதிர்வினை காரணமாக, நிகழ்ச்சியில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு, அனுசுயா மீண்டும் நடனமாடுவதை மறுத்துவிட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் நடனம் ஆடுமாறு கேட்டுக்கொண்டதனால், அவர் சில நேரம் நடனமாடிவிட்டு, நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.