சஞ்சய் திப்பாதி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “பின்னி அண்ட் பேமிலி”. இப்படத்தின் மூலம், நடிகை அஞ்சினி சினிமா உலகிற்கு அறிமுகமாகினார்.
அவருடைய குடும்ப பின்னணி பார்ப்பதற்குள், நடிகர் வருண் தவானின் உறவினராக இருக்கிறார். சமீபகாலமாக, அஞ்சினி, சல்மான் கான் நடிக்கும் “சிக்கந்தர்” படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகை அஞ்சினி, “சிக்கந்தர்” படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156136-1024x582.png)
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான், சல்மான் கானின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு கனவைப்போல் உள்ளது. ஒவ்வொரு முறையும், படத்தின் செட்டுக்குள் நுழையும்போது, இது நிஜமா? அல்லது கனவா? என்று நான் ஒவ்வொரு நாளும் என்னையே குழப்பிக்கொள்வேன் என்றார்