பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேயின் மகளான அனன்யா பாண்டே தற்போது 27 வயதைக் கடந்துள்ளார். பாலிவுட் திரைப்பட உலகில் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகைகளில் ஒருவர் அவர். 2019ஆம் ஆண்டு வெளியான Student of the Year 2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் Khaali Peeli, Gehraiyaan, Liger, CTRL போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார். ரசிகர்களிடையே மனதை கவர்ந்த இளம் பாலிவுட் நடிகைகளில் முன்னணியில் திகழ்கிறார் அனன்யா பாண்டே.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் நடிகைகள் ஓய்வு எடுக்க தாய்லாந்து, மாலத்தீவு, ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைத் தீவுகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. அதுபோல, அனன்யா பாண்டேயும் அடிக்கடி சுற்றுலா தளங்களில் பிகினி உடையில் இயற்கையை அனுபவித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் ஐரோப்பிய நாட்டிலுள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் பிகினி அணிந்து, விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

