விஜய் மில்டன் இயக்கி, ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது ‘கோலி சோடா’ திரைப்படங்களின் தொடர்ச்சியாக உருவாகும்.
ஏற்கனவே இப்படத்தில் ஆரி, பரத், சுனில் மற்றும் பால் டப்பா ஆகியோர் இணைந்திருந்தனர். தற்போது நடிகை அம்மு அபிராமியும் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘கோலி சோடா’ வெப் தொடரில் அம்மு அபிராமி நடித்திருந்தார். தற்போது மீண்டும் விஜய் மில்டனுடன் இரண்டாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.