Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பாலி கடற்கரையில் குடும்பத்துடன் VIBE செய்யும் நடிகை அமலாபால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் பல சூப்பர் ஹிட் நடிகர்களுடன் இணைந்து நடித்து, நிறைய வெற்றிப் படங்களை அளித்தவர். தமிழில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தபோது, மிகப் பிஸியாக இருந்த அமலாபால், இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் கசப்பாகி, இருவரும் மனமொத்து பிரிந்து விவாகரத்தும் பெற்றனர். ஏ.எல். விஜய் மறுமணம் செய்து கொண்ட நிலையில், சில ஆண்டுகளில் அமலாபாலும் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

பாலி கடற்கரையில் தங்களது பிரச்சினைகளை மறந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், அமலாபால் தன்னுடைய கணவர் மற்றும் பாசமான குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அதிகமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளாரா அல்லது படங்களை தயாரிக்க முயற்சிப்பாரா என்பதற்கான கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

- Advertisement -

Read more

Local News