தமிழ் சினிமாவில் ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அந்த படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும், விஜய் வசந்தின் ஜோடியாகவும் நடித்திருந்தார். நாடோடிகள் படத்திற்குப் பிறகு, ‘ஈசன்,’ ‘ஏழாம் அறிவு,’ ‘வீரம்,’ ‘தனி ஒருவன்,’ ‘தாக்க தாக்க,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பணி’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்ததாகவும், இவ்வகை காட்சிகளில் அவர் நடித்திருக்கக் கூடாது எனவும் சிலர் குறை கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேட்டி அளித்த நடிகை அபிநயா, “அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும், அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுமையாக இயக்குநர் எடுத்த முடிவு. அதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ‘பணி’ படத்தை இயக்கிய ஜோஜு ஜார்ஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர். புகழ்பெற்ற நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.