பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன், ‘பிளாக் பிரைடே’, ‘தீவர்’, ‘சர்க்கார்’, ‘குலால்’, ‘ஹைதர்’, ‘பேபி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக ஆனார். மேலும், ஓ.டி.டியில் வெளியாகிய ஸ்பெஷல் ஆப்ஸ், பார்ஸி, தி ரெயில்வே மென் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களை விட இவரது ஓ.டி.டி வெப் தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார். இந்நிலையில், கே கே மேனன், ஓ.டி.டிக்கு நட்சத்திரங்கள் தேவை இல்லை, நடிகர்கள்தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருப்பவன் நான். ஒரு பிளாக்பஸ்டர் படத்திலோ அல்லது வேறு விதமான படத்திலோ நடிக்கவில்லை என்பதனால், ஒரு நடிகனாக எனது மதிப்பு குறைவாக இருக்கும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. சினிமாவுக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணம் தோன்றியிருக்கலாம். ஆனால் இப்போது, திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்குச் சமமாக ஓ.டி.டி வழியாக எனக்கு பாராட்டுகள் கிடைக்கின்றன. இதற்கு நடிகராக இருந்தாலே போதும்; நட்சத்திரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.