Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆர்யன் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த நடிகர் விஷ்ணு விஷால்! #AARYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. 2022 ஆம் ஆண்டில், விஷ்ணு விஷால் *ஆர்யன்* என்ற படத்தில் கமிட் ஆனார், ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான தகவலை விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன், செல்வராகவன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. 

சாம். சி எஸ் இசையமைக்க, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News