Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

பூஜையுடன் தொடங்கிய நடிகர் விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விமல், ‘பசங்க’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, ‘களவாணி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கலகலப்பு’ போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நிலைத்த இடத்தை பெற்றவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘தேசிங்குராஜா 2’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விமலின் அடுத்த புதிய திரைப்படத்துக்கான தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 

இந்த புதிய படத்தை ‘அஜித் விநாயகா பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் இயக்குநராக மனீஷ் கே தோப்பில் பணியாற்ற உள்ளார்.‌அவர், ‘ப்ளட்லைன்’ மற்றும் ‘சன் ஆப் கேங்ஸ்டர்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News