Tuesday, January 14, 2025

பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் விஜய் சேதுபதி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம் மற்றும் வில்லன் வேடம் என பல பரிமாணங்களில் நடித்து வந்துள்ளார். அதோடு, தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் தன்னுடைய தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ எனும் படத்தில் நிவாஸ் கே இசையமைத்துள்ள ஒரு பாடலுக்கு விஜய் சேதுபதி வரிகளை எழுதியுள்ளார். அந்த பாடலின் பெயர் “ஏதோ பேசத் தானே.” மேலும், இந்தப் பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News