Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘சங்கராந்திகி வஸ்துனம்’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘சங்கராந்திகி வஸ்துனம்’ பொங்கல் திருவிழாவிற்கு வெளியானது. இந்த படம் பெரிய வெற்றியை பெற்று, தற்போது ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு, ராஜமுந்திரியில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை ரசிகர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. மேலும், சென்னையில் இந்த வெற்றியை சிறப்பிக்கும் வகையில் ‘சக்சஸ் பார்ட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான தகவல்களைத் தனது புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் அனில் ரவிப்புடி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் விஜய் சேதுபதி, வாணி போஜன், சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News