தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த மாதம் முன்னோட்டத்துடன் வெளியானது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தாணு, “மனிதம் இணைகிறது, மகத்துவம் தெரிகிறது” என்ற வாசகத்துடன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதை அறிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ பகுதிகள் 1, 2 ஆகியவற்றிலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்கு பிறகு, சிலம்பரசனும் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள். தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

