Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகர் வெற்றி என்றாலே வித்தியாசமான கதைகளில் நடிப்பவர் – இயக்குனர் பாக்கியராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் “ஆலன்” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

நடிகர் வெற்றி பேசுகையில், “ஆலன்” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சிவாவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், “வெற்றி” என்றால் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. இந்த படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “உங்களது வெற்றிப் பயணத்தை தொடருங்கள். இதுவும் காதல் கதைதான், ஆனால் கமர்ஷியல் கலந்திருக்கிறது” என்றார்.

- Advertisement -

Read more

Local News