பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1959-ல் வெளியான படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.பெருமைமிக்க கிளாசிக் படங்களை எல்லாம் 4கே தொழில்நுட்பத்தில் ரெடி செய்து வரும் என்.எஃப்.டி.சி. – இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் தொகுப்பிலிருந்து 35 மிமீ வெளியீட்டு அச்சிலிருந்து டிஜிட்டல் முறையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பிரின்ட் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட ஆவணக் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை இயக்குநர் சீனுராமசாமி பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
