கூலி படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், சிறப்பு தோற்றங்களில் பாலகிருஷ்ணா மற்றும் சிவராஜ்குமார் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் மற்றொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு அடுத்த முக்கிய வில்லனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.