Touring Talkies
100% Cinema

Saturday, October 25, 2025

Touring Talkies

தான் பேசியதாக பரவும் தளபதி விஜய் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்து விஜய்யை நடிகர் சூரி விமர்சனம் செய்ததாக வதந்திகள் பரவின.

குறிப்பாக, நடிகர் சூரி விஜய்யை விமர்சனம் செய்தது போன்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூரி. 

அதில், தவறான தகவலை பரப்புவது இந்த சமூகத்துக்கு எப்போதுமே தீமையே தரும். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும் முதிர்ச்சியும் காட்ட வேண்டும். நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்களது சிறந்ததை வெளிப்படுத்துங்கள். அதனால் நம்முடைய பணிகளில் எப்போதும் முழு கவனத்தை செலுத்துவோம்’ என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார் நடிகர் சூரி.

- Advertisement -

Read more

Local News