Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

தாய்லாந்து சுற்றுலா துறைக்கான பிராண்ட் அம்பாசிடர் ஆனார் நடிகர் சோனு சூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபலமான பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து, நாடு முழுவதும் புகழ்பெற்றார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் கள்ளழகர், ஒஸ்தி, அருந்ததி, தேவி, தமிழரசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சோனு சூட் நடிகராக மட்டுமல்லாது, சமூக சேவகராகவும் பெருமை பெற்றவர். சமீபத்தில், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரபூர்வ ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த நியமனத்தை அறிவித்து, அவரை நாட்டின் கௌரவ சுற்றுலா ஆலோசகராக அறிவித்ததுடன், சான்றிதழையும் வழங்கியுள்ளது. இந்த பதவியில், இந்தியாவில் தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் சோனு சூட் வழங்குவார்.

சோனு சூட் தனது எக்ஸ் தளத்தில் இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்து, “தாய்லாந்தின் சுற்றுலாத் துறைக்கான பிராண்ட் அம்பாசடராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டதில் பெருமை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News