Touring Talkies
100% Cinema

Saturday, October 25, 2025

Touring Talkies

தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவர் கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் நடிகர் சிவராஜ் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆந்திர மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இவர் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி ஆவார். இவரது கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். பரமேஸ்வர் ஹிவ்ராலே இயக்கத்தில், பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் என். சுரேஷ் ரெட்டி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, அனைவராலும் மதிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா, அடித்தட்டு மக்களின் நலனுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். 1983 முதல் 1994 வரை, பின்னர் 1999 முதல் 2009 வரை யெல்லந்து தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது நேர்மையும் உறுதியும் மூலம் மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். அவரின் மகத்தான வாழ்க்கையை பெரிய திரையில் உயிர்ப்பிக்கின்றது ‘கும்மடி நரசைய்யா’ திரைப்படம்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் திறமையான நடிகர் பரமேஸ்வர் ஹிவ்ராலே இயக்குநராக அறிமுகமாகிறார். ‘வீரவணக்கம்’ திரைப்படத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் தலைவர் பி. கிருஷ்ணபிள்ளை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News