Tuesday, December 31, 2024

திரு.மாணிக்கம் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் சிவகுமார்….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீதா ராமம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளனர். மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் படத்தின் காட்சிகள் அழகாக மிளிருகின்றன. ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சிவக்குமார் இந்த திரைப்படத்தை பார்த்து, படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இயக்குனர் நந்தா பெரியசாமி மற்றும் சமுத்திரக்கனி சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News