நடிகர் சிலம்பரசன் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த “பத்து தல” திரைப்படம் பெரும் வெற்றியை பெறவில்லை.
இதற்குப் பிறகு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டு, பல மாதங்கள் கடந்தும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கிடையில், சிம்பு மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து “தக் லைப்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலைமையில், இன்று திடீரென சிம்பு தனது அடுத்த படத்தைக் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில், “Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT !!!” எனக் கூறி, ரசிகர்களுக்காக தனது அடுத்த படத்தின் பின்புலத்தை குறிப்பிட்டு, அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளார்.