பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக உள்ளவர் ஷாஹித் கபூர். இவரது நடிப்பில் சமீபத்தில் தேவா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நடிகர் ஷாஹித் கபூர் நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளார். அது மட்டும் அல்லாமல், ஒரு தொண்டு நிறுவனத்திற்கான நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்வுக்கான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் முன்னதாக கிரிக்கெட் தழுவி உருவான “ஜெர்சி” திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.