தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை மற்ற நடிகர்கள் சந்திப்பது ஒரு அபூர்வமான விஷயம்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி மற்ற நடிகர்களும், நடிகைகளும் மகிழ்ச்சியில் அதை பகிர்வார்கள்.
அந்த வகையில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாகவும் உயர்ந்து நடித்து வருபவர் சதீஷ். அஜித்தை நேரில் சந்தித்தது பற்றி, “அஜித் சாரிடமிருந்து ஒரு இனிப்பான ஆச்சரியம். மிகவும் பணிவான ஜென்டில் மேன்… லவ் யு சார் அண்ட் ஷாலினி அண்ணி,” என அவர்களோட எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.