Friday, October 18, 2024

புது கெட்டப்பில் நடிகர் சதீஷ்… அட ரோலக்ஸோட பிரதர் மாதிரி இருக்கிறாரே என ரசிகர்கள் டாக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவா நடித்துசிஎஸ் அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின், இதன் இரண்டாம் பாகம் வெளியானது, அதுவும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் வில்லனாக சதீஷ் நடித்திருந்தார். தற்போது ரசிகர்கள் ‘தமிழ் படம் 3’ வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரோலக்ஸ் ஆக உணர்கிறார் என்று பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ‘தமிழ் படம் 3’ வருமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சதீஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘எதிர் நீச்சல்’ படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பாராட்டைப் பெற்றவர். இதன் பின்பு, ‘கத்தி’, ‘மான் கராத்தே’, ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்களில் அவர் செய்த நகைச்சுவை தோற்றம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

சதீஷ், தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவரையிலேயே, ‘நாய்சேகர்’, ‘ஓ மை கோஸ்ட்’, ‘வித்தைக்காரன்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘சட்டம் என் கையில்’ போன்ற படங்களில் கதாநாயகனாக மாறினார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.

- Advertisement -

Read more

Local News