தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது ‘பெத்தி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், உலகின் முதல் ‘வில்வித்தை பிரிமியர் லீக்’ போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்காக பிரதமரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்
